ஈரோடு இடைத்தேர்தல்… மார்ச் 2 ரிசல்ட்! 15 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை!

Default Image

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

வாக்கு பதிவு நிறைவு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை 25ம் தேதி மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

தேர்தலில் 4 முனை போட்டி:

ERODEBYPARTIES

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு:

TNPOLICE13

நேற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைத்தது தேர்தல் ஆணையம். வாக்கு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

15 சுற்று வாக்கு எண்ணிக்கை:

votinground28

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு 16 மேசைகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 77 வேட்பாளர்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy