#BREAKING: துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
துருக்கியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்.
மீண்டும் நிலநடுக்கம்:
துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மாலத்யா மாகாணத்தின் யெஸில்யுர்த் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விரிசல் விட்டிருந்த பல கட்டடங்கள் தற்போதைய நிலநடுக்கத்தால் விழுந்து நொறுங்கின.
இதுவரை 10,000 பின் அதிர்வுகள்:
பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்களை இடிந்து விழுந்ததுடன் 1.73 லட்சம் கட்டடங்கள் சேதமடைந்தன. பிப்ரவரி 6-ல் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் இதுவரை 10,000 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாலத்யா மாகாணத்தில் நிலநடுக்கம்:
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிப்.6 அன்று தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவின் சில பகுதிகளை நாசம் செய்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 11 துருக்கிய மாகாணங்களில் மாலத்யாவும் ஒன்று. இந்த நிலையில், மாலத்யா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.