தமிழகத்தில் கடற்பாசி வளர்ப்புக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு.! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.!

Default Image

கடல்பாசி வளர்ப்புக்கு தமிழகத்திற்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு. 

தமிழகத்தில் மீன்வளத்துறையில் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், புதிய கடல்சார் திட்டங்கள் குறித்தும் மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

120 கோடி ரூபாய் : அவர் கூறுகையில், கடல்பாசி வளர்ப்புக்கு தமிழகத்திற்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 18 கோடி ரூபாய் செலவில் 5000 ஜிபிஎஸ் கருவிகள் 5000 விசைப்படகுகளுக்கு பொருத்தப்பட உள்ளது. எனவும் ,

இறால் ஏற்றுமதியில் முதலிடம் : மேலும் , இறால் ஏற்றுமதியில் மட்டும் நமது நாடு 1 லட்சம் டன் இலக்கு வைத்துள்ளது. இறால் ஏற்றுமதியில் நமது நாடு 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமரின் சுயபாரதம் வளர்ச்சியின் கீழ் இந்த வளர்ச்சி ஏற்பட்டுளது என் குறிப்பிட்டார் .  மேலும் கடந்த  9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மட்டும் சுமார் 2,800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. எனவும், காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்