புத்தகங்கள், செல்போன்களை பார்த்து குரூப் 2 தேர்வு எழுதியதாக புகார்..! – டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை
புத்தகங்கள், செல்போன்களை பார்த்தும் பட்டதாரிகள் குரூப் 2 தேர்வு எழுதியதாக புகார் எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, 186 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், 51,071 பேர் தேர்வு எழுதினார்.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை
இந்த தேர்வின் போது, சென்னை பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்காக கூடுதல் நேரமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், புத்தகங்கள், செல்போன்களை பார்த்தும் பட்டதாரிகள் குரூப் 2 தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.