ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சத்ய பிரதா சாகு கண்காணிப்பு
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைதேதேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக , தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் வாக்குப்பதிவு கண்காணித்து வருகிறார்.