விக்ரமை மிஞ்சப்போகும் ‘இந்தியன் 2’..! அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், படத்தை பற்றி அடிக்கடி சில தகவலும் அவபோது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக வெளியான தகவல் என்னவென்றால், ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மொத்தமாக கமல்ஹாசனுக்கு வில்லன்களாக 7 நடிகர்கள் வில்லன்களாக நடிக்கிறார்களாம்.
அதன்படி, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெய பிரகாஷ், குரு சோமசுந்திரம், மாரிமுத்து, வெண்ணிலா கபடிக்குழு கிஷோர், சிவாஜி குருவாயூர் உள்ளிட்டோர் வில்லன்களாக நடித்து வருகிறார்களாம். மேலும், இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படமும் ஒரு அதிரடியான கேங்ஸ்டர் படம் எனவே அந்த படத்தை மிஞ்சும் அளவிற்கு தற்போது இந்தியன்2 திரைப்படத்தில் 7 வில்லன்கள் நடித்துவருவதாக பரவும் தகவல் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.