சித்து மூஸ்வாலா கொலை வழக்கு..! சிறையில் உயிரிழந்த குற்றவாளிகள்..!

Default Image

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஞ்சாப் சிறையில் உயிரிழந்தனர். 

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்தீப் சிங் துஃபான் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலம் கோயிண்ட்வால் சிறையில் ஏற்பட்ட பெரும் மோதலில் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநில கோயிண்ட்வால் சிறையில் குற்றவாளிகளுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் படாலாவைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற துஃபான் மற்றும் புத்தலானாவைச் சேர்ந்த மன்மோகன் சிங் என்ற மோஹ்னா என்ற கைதிகள் இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலில் குளித்தலையைச் சேர்ந்த கேஷாவ் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு கைதி காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவர்கள் மூவரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சித்து மூஸ்வாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இதில் மன்தீப் சிங் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வாகனங்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, மே 29 அன்று 28 வயதான பாடகர் சித்து மூஸ்வாலாவிற்கு அவருக்கு அருகில் இருந்து 30 முறை துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். துப்பாக்கியால் பலமுறை தாக்கப்பட்டதால் மூஸ்வாலா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் கொலைக்கு காரணமான படாலாவைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற துஃபான் மற்றும் புத்தலானாவைச் சேர்ந்த மன்மோகன் சிங் என்ற மோஹ்னா இருவரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்