ரூ.1,543 கோடியில் நவீனமயமாகும் 3 பேருந்து முனையங்கள்!
பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்.
சென்னையில் ரூ.1,543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. அதன்படி, திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் ரூ.1,543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படுகின்றன. பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.
வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில், திருவான்மியூர் ரூ.446 கோடி, வடபழனி ரூ.610 கோடி, வியாசர்பாடி ரூ.485 கோடி மதிப்பிட்டியல் நவீனமயமாக்கப்படுகின்றன என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.