ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவடா.! அதிமுக புகார்.!
ஈரோடு கிழக்கு இடைதேதேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக , தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மேலும், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா , தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோரும் வாக்களித்து விட்டு சென்றனர்.
தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு மின் அஞ்சல் மூலமாக புகார் தெரிவிக்கப்பட்டுளளது. ஏற்கனவே வாக்காளர்கள் கையில் வைக்கும் மையின் தரம் குறைவாக இருக்கிறது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, ஈரோடு கிழக்கு, இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 138 மற்றும் 139 ஆகிய இடங்களுக்கு அருகே மாற்று கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக குற்றம் சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்துள்ளார்.