லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடையும்… இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பதிவு..!

Default Image

பிரபல இயக்குனர் மிஷ்கின் படங்களை இயக்குவது மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

Thalapathy 67 mysskin
Thalapathy 67 mysskin [Image Source: Twitter ]

இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடித்துவிட்டதாகவும், இதனால், காஷ்மீரில் இருந்து தான் சென்னை திரும்பியதாக இயக்குனர் மிஷ்கின் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது ” இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்… minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட “Leo” படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

Mysskin sir is part of Thalapathy67
Mysskin sir is part of Thalapathy67 [Image Source : Twitter]

படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான்.

Mysskin
Mysskin [Image Source: Twitter]

என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.
Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்