அந்த பெண் குழந்தை கொடுத்த ஃபிரைடு ரைஸ்.. ஒட்டுமொத்த அன்பின் வெளிப்பாடு.! முதல்வர் நெகிழ்ச்சி.!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் செல்கையில் ஒரு பெண் குழந்தை எண்னிடம் பிரைடு ரைஸ் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

வருகிற மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை கொண்டாட திமுக தொண்டர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆடம்பரம் வேண்டாம் : இந்த சமயத்தில் தான் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி தனது முகநூல் பக்கத்தில் ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் அவர் இன்னோர் முக்கிய நெகிழ்ச்சி சம்பவத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஃபிரைடு ரைஸ் : அதில், ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்தபோது, ஒருவர் ஓடிவந்து, தன் பெண் குழந்தையின் கையில் ஃபிரைடு ரைஸ் (Fried rice) கொடுத்து என்னிடம் தரச் சொன்னார். தொடர் பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ, இல்லையோ என்ற நினைப்பில், அதை செய்த அந்தத் தமிழரின் அன்பினில்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை கண்டேன். அந்த குழந்தை என்னிடம் உணவை தந்தவுடன் ‘Advance Happy Birthday தாத்தா’ என்று பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்தபோது நான் நெகிழ்ந்து போனேன். என பதிவிட்டுள்ளார்.

உள்ளத்தில் உற்சாகம் : அப்போது அங்கே கூடியிருந்த பெண்களும் குழந்தைகளும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து மகிழ்ந்தனர். என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துகளால் நினைவுபடுத்திக்கொண்டபோது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது. என அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்