#Breaking : 120 தொகுதிகள்.. 2 மாநிலங்கள்.. ஆளப்போவது யார்.? தொடங்கியது வாக்குப்பதிவு.!
நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ள்ளது.
இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் இதே நாளில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இரு மாநில தேர்தல் : இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 120 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு பெறும் அறிவிக்கப்பட்டு இருந்ததது.
தேர்தல் ஒத்திவைப்பு : இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் சோகியாங் எனும் சட்டசபை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தொடங்கியுள்ளது.
119 தொகுதிகள் : தற்போது நாகாலாந்தில் 60 தொகுதிகள், மேகாலயாவில் 59 என 119 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் தற்போதே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
நாகாலாந்து : நாகாலாந்து மாநிலத்தில் பாஜக – என்டிபிபி கூட்டணி அமைத்து 20 – 40 என்ற விகிதத்தில் தேர்தல் களம் காணுகிறது. அதே போல, காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் களம் காணுகின்றன.
மேகாலயா : அதே போல, மேகாலயாவில் பாஜக கடந்த முறை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருந்த நிலையில் தற்போது தனித்து காலம் காணுகின்றன. இம்முறை, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், என்பிபி ஆகிய பிரதான கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.