தலைக்குப்புற கவிழ்ந்த வேன்.. 4 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
காங்கேயம் அருகே வாலி பனங்காடு என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு.
திருப்பூர்: காங்கேயத்தில் இருந்து முத்துருக்கு செல்லும் வழியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள், குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பியபோது வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் கிட்டுசாமி, பூங்கொடி, தமிழரசி, சரோஜா ஆகியயோர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.