மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்!
கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11.45 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைப்பெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சி வளர்ச்சிப் பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும், நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் நம் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.