தொடர் முயற்சி.. தாம்பரத்தில் நிற்கும் தேஜஸ் ரயில் – டி.ஆர்.பாலு பேட்டி
4 ஆண்டுகால தொடர் முயற்சியால் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்கிறது என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி.
தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 முதல் 6.27 வரையும், இரவு 8.38 முதல் 8.40 வரை 2 நிமிடங்கள் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது, இதனை, தாம்பரம் ரயில் நிலையத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்களின் தொடர் அழுத்தத்தால், தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. 4 ஆண்டுகால தொடர் முயற்சியால் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்கிறது. 2019 தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்த கோரிக்கை விடுத்திருந்தனர். ரயிலை தாம்பரத்தில் நிறுத்தும் கோரிக்கை ஏற்கப்படாததால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன் என்றும் கூறினார் .