வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..!
வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்று முதலிடத்திலும், 36 தயாரிப்புகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
புவிசார் குறியீடு
வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும்.
அந்த வகையில், ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்று முதலிடத்திலும், 36 தயாரிப்புகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.