66 மணி நேரத்தில் 37 நிலநடுக்கங்கள்..! நில அதிர்வு மையம் தகவல்..!
மத்திய துருக்கியில் 66 மணி நேரத்தில் 37 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மத்திய துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய துருக்கியில் கடந்த 66 மணி நேரத்தில் 37 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது.
???? This is the 37th felt #earthquake in Central Turkey in the last 66 hours.
— EMSC (@LastQuake) February 25, 2023