உங்க மனசு ரொம்பவே பெருசு…’பத்து தல’ படத்தில் சிம்பு நடிக்க இதுதான் காரணமா..?

Default Image

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தை இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

SilambarasanTR
SilambarasanTR [Image Source : Google ]

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் சிம்பு தற்போது பத்து  தல படத்தில் எதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதற்கான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Silambarasan TR and gautham karthik
Silambarasan TR and gautham karthik [Image Source : Google ]

அது என்னவென்றால், படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  தற்பொழுது கெளதம் கார்த்தி வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். எனவே அவருடைய வளர்ச்சிக்கு நாமளும் சிறிது உறுதுணையாக இருப்போம் என்று தான் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டாராம்.

pathu thala movie
pathu thala movie [Image Source : Google ]

மேலும், அதனால் தான் பத்து தல படத்தில் கூட கௌதம் கார்த்திக் என்று தனி பாடல் ஒன்று வைக்க வேண்டும் என்று சிம்பு சொன்னாராம் இந்த தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் தலைவா உங்க மனசு என்ன மனசு என்று சிம்புவை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்