பரபரப்பு…திடீரென இடிந்து விழுந்த சாலையில் சிக்கிய நாய்..! வைரலாகும் வீடியோ..!
டெல்லியில் திடீரென சாலை இடிந்து விழுந்ததில் நாய் மற்றும் இரண்டு பைக்குகள் சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள சாலை திடீரென இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே புரம் பகுதியில் உள்ள சாலையின் குறுகிய பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரிய பள்ளமானது அந்த இடத்தில ஏற்பட்டுள்ளது. சாலை ஓரம் படுத்திருந்த ஒரு நாயும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகளும் அந்த பள்ளத்தில் விழுந்தன.
இந்த பரபரப்பு சம்பவம் சாலையின் அருகே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சாலை இடித்த இடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் டெல்லி காவல்துறையினர் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சாலையில் இரண்டு பைக்குகளுக்கு அருகில் நாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென சாலையின் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | A road collapsed in Delhi’s RK Puram area on February 22. A dog and a bike fell inside a hole formed after a narrow passage of the road collapsed. No fatalities were reported: Delhi Police
(CCTV visuals verified by Police) pic.twitter.com/EbK2Q6no0P
— ANI (@ANI) February 25, 2023