எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அதிமுக தோல்வி – முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பேட்டி

Default Image

எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி செல்லவில்லை என முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பேட்டி.

எம்ஜிஆர் தலைமை:

OPS Honors at MGR Memorial

எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் எம்பி கேசி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேசி பழனிசாமி, அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் தலைமையில்  போகிறோம். அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் பக்கம் தான் உள்ளார்கள்.

சாமானியர்களுக்கான கட்சி:

tamilmaganusenadmk

வேறு யாரு பக்கத்திலும் இல்லை, ஆனால், எம்ஜிஆர் கட்சி தான் அதிமுக, இந்த கட்சியில் சாதி, பாகுபாடு, லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைய் எதுவும் இல்லை. ஒரு சாமானியர்களுக்கான கட்சி. இப்போது உள்ள தமிழ்மகன் உசேன் பேருந்து நடத்துனராக இருந்தவர். அரசியலில் தற்போது உயர்ந்துள்ளார். ஆனால் இனிமேல் ஒரு சாமானியனுக்கு குறைந்தது 100 கோடி ரூபாய் இருந்தால் சட்டமன்றத்தில் சீட் வாங்க முடியும் என விமர்சித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இது திராவிட சிந்தனையும், சித்தாந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி செல்லவில்லை, பொதுக்குழு செல்லும் என்று தான் தீர்ப்பு வந்துள்ளது. கண்டிப்பாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கும் தலைமை தான் அதிமுகவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வழிநடத்தும் என்று கூறினார்.

தலைமை உருவாகும்:

எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வந்து, தொண்டர்களால் தேந்தெடுக்கும் தலைமை உருவாகும், அந்த தலைமை அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்