நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது – சோனியா காந்தி
நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது என சோனியா காந்தி பேச்சு.
சோனியா காந்தி அவர்கள் முன்னிலையில் ராய்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
சோனியா காந்தி பேச்சு
இந்த நிகழ்வில் உரையாற்றிய சோனியா காந்தி அவர்கள், பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸுக்கு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி அளிப்பது என்னவென்றால் பாரத் ஜோடா யாத்திரையோடு என்னுடைய இன்னிங்ஸ் முடியக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம்; நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது. ஒருசில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.
எந்த எதிர்ப்புக் குரலையும் இரக்கமின்றி அமைதிப்படுத்துகிறார்கள். நம் ஒவ்வொருவருக்கும் கட்சி மீதும், நாட்டின் மீதும் முக்கிய பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.