ஈரோடு – தேர்தல் பறக்கும் படை எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பறக்கும் படை எண்ணிக்கை 10ஆக உயர்வு.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படை எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறலை கண்காணிக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
3 பறக்கும் படைகள் 4 நிலை கண்காப்பு குழுக்களும் ஏற்கனவே அனுப்பப்பட்ட நிலையில், 10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகளின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட்டு புகார்கள் வரும் இடங்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், பறக்கும் படை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.