அசத்தல்…6 அடியில் “விஜய் -அஜித்” கேக்.! வைரலாகும் புகைப்படம்.!

Default Image

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ‘அன்பு’ எனும் பேக்கரி ஒன்றில் கேக் கண்காட்சி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பல வித்தியாச வித்தியாசமான கேக்குகளை செய்து பேக்கரி அசத்தியுள்ளது.

அந்த வகையில், எல்லாரும் பார்த்து மெய்சிலிர்க்க வேண்டும் என்பதற்காகவே அஜித் –  விஜய் இருவரும் தோல் மீது கை போட்டுகொண்டவாறு 6 அடியில் அவர்களுடைய உருவத்தை கேக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல  வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் 120 கிலோ எடையை கொண்டது என கூறப்படுகிறது.

அதற்கான சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும், இந்த கேக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட பல வகையான கேக்குகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பலருக்கும் பிடித்த ஒன்றாக  அஜித் -விஜய் உருவத்தை வைத்து செய்த அந்த 6 அடி கேக் மாறியுள்ளது.

பேக்கரி கண்காட்சிக்கு வந்த பலரும் அஜித் -விஜய்  உருவ கேக்கை பார்த்துவிட்டு செல்ஃபி எடுத்து சென்றுள்ளார்கள். மேலும் கண்காட்சியில் குழந்தைகளுக்காக அவர்களுக்கு பிடித்த கார்டூன்களையும் கேக்குகளில் செய்து அசத்தியுள்ளார்.

vijay ajith cake
vijay ajith cake [Image Source : Google ]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்