#BREAKING: முதல்வர் வாக்குறுதி – தேர்தல் அலுவலரிடம் அதிமுக பரபரப்பு புகார்!
ரூ.1000 வழங்குவது எப்போது என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தது விதிமீறல் என குற்றசாட்டு.
மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் அலுவலரிடம் அலுவரிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது. ஈரோடு சட்டமன்ற தொகுதியில் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இறுதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் அலுவலரிடம் அலுவரிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது. ரூ.1000 வழங்குவது எப்போது என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தது விதிமீறல் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.