டெல்லி மேயர் மீது தாக்குதல்.? பாஜக தங்கள் தோல்வியை ஏற்க வேண்டும்.! ஆம் ஆத்மி தலைவர் கடும் கண்டனம்.!
டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், பிஜேபியின் பாஜக ஆண் கவுன்சிலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி முக்கிய தலைவர் ஆதிஷி குற்றம் சாட்டினார்.
டெல்லி மாமன்ற சபை (கவுன்சிலர் சபை) டெல்லி பாராளுமன்ற சபைகளை விட அதிக அமளிகளை கண்டு போர்க்களம் போல காட்சியளிக்கிறது. அந்தளவுக்கு அங்கே கராசாரசம்பவங்கள் நடைபெறுகின்றன. அங்கு தடைகள் தாண்டி நீதிமன்றம் வரை சென்று மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி டெல்லி மேயர் பதவியை வென்றது. ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதலே இரு கட்சி கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் அதிகரித்து, டெல்லி மாமன்ற சபை அமளியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
நேற்று அந்த அமளியானது இரு கட்சி கவுன்சிலர்களுக்கும் கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் குறித்து டெல்லி ஆம் ஆத்மி முக்கிய தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், மேயர் ஷெல்லி ஓபராய் பிஜேபியின் பாஜக ஆண் கவுன்சிலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக தங்கள் தோல்வியை ஏற்க வேண்டும். மேயரை தாக்கியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஆதிஷி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.