ஏகே 62..?வணங்கான்..? எந்த படம்…செம குழப்பத்தில் அருண் விஜய்.!
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள “அச்சம் என்பது இல்லையே” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தான் முடிந்தது. இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய்க்கு 2 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு திரைப்படம் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்து பாதியில் நின்ற வணங்கான். மற்றோன்று மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள “ஏகே 62” திரைப்படம். இதில் வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
மற்றொரு படமான ஏகே 62 திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்புமே வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தான் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, இந்த இரண்டு படத்தில் எந்த படத்தை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் அருண் விஜய் இருக்கிறாராம்.
ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து கலக்கி வந்த அருண் விஜய் பெரிய வெற்றிகள் பெற்றாலும் அவருடைய பெயர் வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் அவர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவருடைய மார்க்கெட்டும் அவருடைய பெயரும் வெளியே தெரிய ஆரம்பித்தது என்று கூறலாம்.
எனவே இதன் காரணமாக, அவர் ” ஏகே 62″ திரைப்படத்திலும் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்கிறார்கள். அதேபோல் “வணங்கான்” திரைப்படமும் பாலாவின் படம் என்பதால் தொடர்ச்சியாக ஹீரோவாக தான் நடித்து வருகிறார் எனவே அந்த படத்திலும் அவர் நடிக்க முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது. எனவே எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அருண் விஜய் முடிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.