ஜோசியம் பார்த்து படம் எடுக்க வரக்கூடாது… நடிகர் சத்யராஜ் பேச்சு.!
நடிகர் சத்யராஜ் தற்போது பி.ஜி. மோகன் ,எல்.ஆர். சுந்தரபாண்டி ஆகியோரது இயக்கத்தில் “தீர்க்கதரிசி” என்ற திரைப்படத்தில் அஜ்மல் அமீருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர், சத்யராஜ், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் “ஒரு படத்தின் ஹீரோ, வில்லன் எல்லாமே கதைதான்.எனவே நல்ல கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படங்கள் நீங்கள் எடுத்தால் கண்டிப்பாக அந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சினிமா பற்றி தெரிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, ஜோசியம் பார்த்துவிட்டு ஒரு படம் எடுக்க வரக்கூடாது. ஹீரோவின் தகுதிக்கேற்ப படத்தில் காட்சிகளை வைக்க வேண்டும். ஒரு ஹீரோ இப்போது தான் வளர்ந்து வருகிறார் என்றால் அவரை திருப்திப்படுத்த மாஸ் காட்சிகள் வைத்தால் படம் நன்றாக இருக்காது.
ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் மிகப்பெரிய காரணம். இந்த “தீர்க்கதரிசி” படத்தின் கதையும் சிறப்பாக இருப்பதால் கண்டிப்பாக படம் மக்களுக்கு பிடிக்கும். மிப்பெரிய வரவேற்பை பெறும்” என்று கூறியுள்ளார்.