திமுகவின் ‘பி’-டீமாக செயல்படும் ஓபிஎஸ் இன்று அடையாளம் தெரியாதவராகி உள்ளார்.! – ஜெயக்குமார் விமர்சனம்.!
திமுகவோடு கைகோர்த்து பி-டீமாக செயல்பட்ட ஓபிஎஸ் இன்று அடையாளம் தெரியாதவர்களாக மாறிவிட்டனர். தொண்டர்களால், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அனைவரும் ஜெயலலிதா உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : இந்த விழாவுக்கு பிறகு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நல்ல செய்தி வந்துள்ளது. நேற்று உச்சநீதின்றம் அளித்த தீர்ப்பின் மூலம் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுகவோடு கைகோர்த்து பி-டீமாக செயல்பட்ட ஓபிஎஸ் இன்று அடையாளம் தெரியாதவர்களாக மாறிவிட்டனர். தொண்டர்களால், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என குறிப்பிட்டார்.
மேல்முறையீடு : மேலும்,அந்த பாராளுமன்ற வெற்றியானது 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் ஆயிரம் சொல்லலாம். சட்டப்படி நாங்கள் சரியாக செயல்படுவதால் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் ஜெயிப்போம். என ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
யாரும் எதிரிகள் இல்லை : மேலும் கூறுகையில், எங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரை தவிர எங்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை. மற்ற யார் வந்தாலும் நாங்கள் சேர்த்துக்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.