நாளை மாலை 5 மணியுடன் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது – சிவகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளையுடன் நிறைவடைகிறது பிரச்சாரம்
ஈரோட்டில் தேர்தல் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாளை மாலை 5 மணியுடன் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நாளை மாலை 5 மணியுடன் வெளியேற வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளார்.
மேலும், பரிசு பொருட்கள் அளித்ததாக 2 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். பரிசு பொருட்கள் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டும் வருகிறோம் என தெரிவித்துள்ளார்.