நடிகர் சிம்புவுக்கு ‘டும்..டும்..டும்’.! பொண்ணு யாரு தெரியுமா..?
நடிகர் சிலம்பரசன் 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது சிம்புவுக்கு மிக விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இந்த இலங்கை பெண்ணை அவருடைய தந்தையும், தாயும் பார்த்துள்ளார்களாம். சிம்புவுக்கும் அந்த பெண்ணை பிடித்துப்போக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
மேலும், சிம்பு திருமணம் செய்துகொள்ளப்போகும் தகவல் உண்மை என்றால் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. சில பேட்டிகளில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என கூறியிருந்தார். எனவே அதனை வைத்து பார்க்கையில் சிம்புவுக்கு தற்போது திருமணம் நடைபெறவுள்ளதாக பரவும் தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.