தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை.! 3 பேர் நீதிமன்றத்தில் சரண்.!

Default Image

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரத்தில் கடந்த 22ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

குற்றவாளிகள் சரண் : இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று, மதுரை நீதிமன்றத்தில் வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை குற்றத்தில் வேறு யாரெல்லாம் சம்பந்தபட்டுள்ளார்கள் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சகோதரர் கொலை வழக்கு : இந்த கொலை சம்பவமானது முத்துக்குமாரின் சகோதரர் மரணம் தொடர்பாக நடந்துள்ளது. அதாவது, முத்துக்குமாரின் சகோதரர் சிவகுமார் என்பவர், அத்திப்பழம் என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. அதனால், அத்திப்பழம் நண்பர்கள் சிவகுமாரை கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அவர்களில் முக்கிய குற்றவாளி சிறையில் உள்ளார்.

இதுதான் காரணமா.? : அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும், தனது தம்பி மரணத்துக்கான நீதி வேண்டும் எனவும் வழக்கறிஞர் முத்துக்குமார் தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.  இதன் உண்மை தன்மையை காவல்துறையினர் விரைந்து விசாரித்து உண்மை தகவல்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்