Today’s Live : மேகாலயாவில் ஊர்வலம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி..!
வாகன ஊர்வலம் :
பிரதமர் நரேந்திர மோடி இன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஊர்வலம் (ரோட்ஷோ) நடத்தினார்.
#WATCH | Prime Minister Narendra Modi held a roadshow in Shillong, Meghalaya today.
(Source: PMO) pic.twitter.com/e230hsgsrj
— ANI (@ANI) February 24, 2023
2023-02-24 06:00 PM
இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய மனு தள்ளுபடி :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாம் தமிழர் கட்சி அளித்துள்ள புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், தேர்தலை நிறுத்தக்கோரிய சுயேட்சை வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
2023-02-24 04:32 PM
மின் நிலையங்களுக்கு ஒப்புதல் :
மன்னார் மற்றும் பூனேரியில் உள்ள அதானியின் 442 மில்லியன் அமெரிக்க டாலர் காற்றாலை மின் நிலையங்களுக்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது.
2023-02-24 03:24 PM
இரண்டரை மணி நேரமாக லிஃப்டில் சிக்கிய தம்பதி :
அமெரிக்காவில் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த புதுமண தம்பதிகள் லிஃப்டில் சிக்கியுள்ளனர். தகவலறிந்து விரைவாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் இரண்டரை மணி நேரமாக லிஃப்டில் சிக்கியிருந்த தம்பதிகளை மீட்டதோடு, புதுமண தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
2023-02-24 01:55 PM
கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு :
கனிம வளங்கள் கடத்தலை தடுக்க சட்டவிரோத குவாரிகள் குறித்து வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறியுள்ளது.
Readmore : கனிம வளங்கள் கடத்தல்.! தாசில்தார்கள் தலைமையில் சிறப்பு குழு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.!
2023-02-24 12:50 PM
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு :
பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக இருந்தாலும், அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, இது குறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம் என்று மேலும் கூறினார்.
2023-02-24 12:01 PM
உக்ரைன் பொறுப்பாளர் இவான் கொனோவலோவ் :
நமது நாடு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடி வருகிறது. 2023 வெற்றி ஆண்டாக இருக்கும் என்றும், இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்றும், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகள் மேலோங்கும் என்றும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று உக்ரைனின் பொறுப்பாளர் இவான் கொனோவலோவ் கூறினார்.
2023-02-24 11:55 AM
விமானத் தொழில்நுட்ப கோளாறு :
கேரளாவில் 168 பயணிகளுடன் கோழிக்கட்டில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
2023-02-24 11:40 AM
மலர் தூவி மரியாதை :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2023-02-24 10:41 AM
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் :
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் விரைவில் தேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் கூறினார்.