காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு.! 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்.?

Default Image

இன்று காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடங்க உள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நடைபெற உள்ள இந்த 85வது மாநாடானது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடக்க உள்ளது.

மாநாடு : இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி என பல காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

2024 தேர்தல் : இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்க 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும்  கூறப்படுகிறது . மேலும் அதற்கான கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளனர் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்