தகவல் பாதுகாப்பு தான் டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய சவால்.! மத்திய அமைச்சர் பேச்சு.!
டிஜிட்டல் உலகை முழுதாக நாங்கள் பாராட்டவில்லை. ஆனால் அது தற்போது வாழ்க்கையாக மாறிவிட்டது. – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
தற்போதைய காலகட்டத்தில் தகவல் பாதுகாப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிப்போயுள்ளது. காரணம் நமது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் எனும் டிஜிட்டல் உலகம் இருப்பதும் , அதில் தனிப்பட்ட ரகசியங்கள் முதல் டிஜிட்டல் சொத்து வரை அனைத்தும் அதில் இருக்கிறது.
டிஜிட்டல் தாக்கம் : இதனை குறித்து, அண்மையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், டிஜிட்டல் உலகினால் ஏற்பட்ட தாக்கங்கள், அதன் சிக்கல்கள் குறித்து அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து ஜி20 மாநாடு அமையும் என குறிப்பிட்டார் மத்திய அமைச்சர்.
பாதுகாப்பு : மேலும் கூறிய அவர், டிஜிட்டல் உலகை முழுதாக நாங்கள் பாராட்டவில்லை. ஆனால் அது தற்போது வாழ்க்கையாக மாறிவிட்டது. அதனால், தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் தரவு தனியுரிமை ஆகியவை டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய சவால்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.