தீர்ப்பு எப்படி வருமோ என கலங்கி போயிருந்தேன்.! திருமண விழாவில் இபிஎஸ் பேச்சு.!
51 ஜோடிகளுக்கும் திருமணம் செய்வதற்கு முன்பாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அடுத்ததாக அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்ற செய்தி நமக்கு கிடைக்கும். – இபிஎஸ் உற்சாக பேச்சு.
இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றமானது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
51 ஜோடிகளுக்கு திருமணம் : இன்று தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மகள் திருமணவிழா மதுரையில் நடைபெற்றது. அந்த ஜோடிகளோடு சேர்ந்து மொத்தம் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனார்.
தீர்ப்பு பயம் : அந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வருமோ என கலங்கி போயிருந்தேன். அச்சத்துடன் இருந்தேன். தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி தூங்காமல் இருந்தேன். தற்போது அந்த தீர்ப்பு வந்துள்ளது. திமுகவின் பி டீமாக செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. என பேசினார்.
ஈரோடு தேர்தல் : மேலும், தமிழகத்திலேயே வலிமையான கட்சி என்றால் அது அதிமுக தான். அதன் வீரத்தை குறைத்து மதித்து விட முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை. ஈரோட்டில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் குறித்து அடுத்தடுத்து நாங்கள் புகார்கள் கொடுத்துள்ளோம். ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களை ஆடுகள் போல பட்டியில் அடைத்து வைத்துள்ளார்கள் ஆளுங்கட்சியினர். எங்கள் மீது பொய்யான வழக்குகளை ஆளுங்கட்சியினர் பதிவு செய்து வருகின்றனர். என குற்றம் சாட்டினார்.
ஜார்கண்ட் ஆளுநர் : அடுத்து, அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள்வந்து விழாவில் கலந்து கொண்டார். அந்த விழா முடிந்து அவர் வீட்டுக்கு சென்ற இரண்டாவது நாளே அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். வேட்பாளர் அறிமுகம் செய்யும்போதே ஓர் நல்ல செய்தி கிடைக்கிறது. என்றும்,
தென்னரசு வெற்றி : இந்த 51 ஜோடிகளுக்கும் திருமணம் செய்வதற்கு முன்பாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. என குறிப்பிட்டார். அடுத்ததாக மார்ச் மாதம் இரண்டாம் தேதி அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்ற செய்தி நமக்கு கிடைக்கும். எனவும், நாம் அடுத்தடுத்து வெற்றிகளை நோக்கி செல்கின்றோம் எனவும் எடடபடி பழனிச்சாமி திருமண விழாவில் பேசினார்.