3 நிமிடத்தில்184 செல்ஃபி..’கின்னஸ் சாதனை’ படைத்த அக்‌ஷய் குமார்.! குவியும் வாழ்த்துக்கள்..

Default Image

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தற்போது ராஜ் மேத்தா என்பவர் இயக்கத்தில் “செல்ஃபி” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வித்தியாசமான முயற்சியில் ப்ரோமோஷன் செய்துள்ள அக்‌ஷய் குமார் கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

Akshay Kumar record
Akshay Kumar record [Image Source : Google ]

படத்தின் ப்ரோமோஷனுக்காக அக்‌ஷய் குமார் ரசிகர்களுடன் 3 நிமிடங்களில் 184 செல்பி புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2015- ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ராக் 3 நிமிடங்களில் 105 செல்பிகள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

அவரை தொடர்ந்து தற்போது அக்‌ஷய் குமார் நிமிடங்களில் 184 செல்பி புகைப்படங்களை எடுத்து ராக் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை படைத்த அக்‌ஷய் குமாருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Akshay Kumar record
Akshay Kumar record [Image Source : Google ]

மேலும், கின்னஸ் சாதனை படைத்தது குறித்து பேசிய அக்‌ஷய் குமார் ” எனது ரசிகர்களுடன் இந்த தருணத்தை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் இப்போது வரை சாதித்துள்ள தருணத்திற்கு..இப்பொது இருக்கும் இந்த இடத்திற்கும் ரசிகர்களின் அன்பு ஆதரவு மட்டும் தான் காரணம். எனவே இந்த கின்னஸ் சாதனையை நான் ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்