டெல்லி மாநகராட்சி அவையில் அமளி..! அவையை ஒத்திவைத்தார் மேயர் ஓபராய்..!
டெல்லி மாநகராட்சி அவையில் ஏற்பட்ட அமளியால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநராட்சி மேயர் தேர்தல்:
டெல்லி மாநராட்சி மேயர் தேர்தல் மூன்று முறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் 9 பேர் மட்டும் தேர்தலை புறக்கணித்ததால், 241 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷைலி ஓபராய் பாஜகவின் ரேகா குப்தாவை தோற்கடித்து டெல்லி மாமன்ற மேயர் பதவியை கைப்பற்றினார்.
அவை ஒத்திவைப்பு :
இந்நிலையில் டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், இன்று டெல்லி மாநராட்சியில் நிலைக்குழு தேர்தல் தொடர்பான நடவடிக்கை தொடங்கப்பட்டதை அடுத்து கூச்சல் குழப்பம் காரணமாக அவையை நாளை வரை ஒத்திவைத்தார். நிலைக்குழு தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை பாஜக கவுன்சிலர் கிழித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் அமளியால் டெல்லி மாநகராட்சி அவை 8வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.