இபிஎஸ் வெற்றி.! அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து தொண்டர்கள் கொண்டாட்டம்.!
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரமே எதிர்பாத்து கொண்டிருந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது என்றே கூறலாம். அதிமுக கட்சி , இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்ல போகிறது. ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு யார் பக்கம் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பொதுக்குழு செல்லும் : அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.
ஓபிஎஸ் நீக்கம்.? : அப்படி என்றால் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டை தலைமை முறை நீக்கப்பட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எனும் முடிவும் எடுக்கப்பட்டது.
தொண்டர்கள் கொண்டாட்டம் : இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இபிஎஸ் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல மற்ற ஊர்களிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.