51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ஈபிஎஸ்..!
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என ஆர்.பி.உதயகுமார் புகழாரம்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளுக்கு ஆர்பி உதயகுமார் முன்நின்று திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வ வாக்கு
இந்த நிகழ்வில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக பொது குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு ஆர்.பி.உதயகுமார் இபிஸ்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வ வாக்கு. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி. மக்களின் தீர்ப்பால் இபிஎஸ் மீண்டும் முதல்வர் ஆவார் என தெரிவித்துள்ளார்.