ஜெயலலிதா பிறந்தநாள் விழா – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை
ஜெயலலிதா 75ஆவது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா தமிழமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடிடுவோம் என டிடிவி அறிக்கை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75ஆவது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா தமிழமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிடிவி அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது கழக நிர்வாகிகள் மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை- எளியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கியும், கிராமம் முதல் மாநகரம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றிச் சிறப்போடு கொண்டாட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் நம் கழக கண்மணிகள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் ஏற்கும் நாளாக இதயதெய்வம் அம்மாவின் பிறந்த நாள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.
இதயதெய்வம் அம்மா அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழா – அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா : தமிழமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடிடுவோம்! pic.twitter.com/uhakjNLsYZ
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 23, 2023