ஆசிரம விவகாரம் – விழுப்புரம் ஆட்சியர், எஸ்பி அறிக்கை தர உத்தரவு!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது மனித உரிமை ஆணையம்.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், ஆசிரம விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி ஆணையிட்டுள்ளது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது மனித உரிமை ஆணையம். அதன்படி, அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது மனித உரிமை ஆணையம்.