நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! இந்தியாவின் பல பகுதிகளில் அதிர்வு..!

Default Image

நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நேபாளத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தை நேபாளத்தின் பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக புது டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது நடுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியிருந்தார். இந்நிலையில் இமயமலையின் அடிவாரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் கண்டறியப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்