#Breaking : புதுடெல்லியில் நில அதிர்வு..! அச்சத்தில் மக்கள்..!
புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது நடுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அதிர்வினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியிருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ், ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நிலநடுக்க அதிர்வின் இடைவெளியை வைத்து பார்க்கும் பொழுது, உத்தரகாண்டில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து தற்பொழுது தலைநகரான டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.