தூங்குகிறவர்களைப்போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? – பீட்டர் அல்போன்ஸ்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலளிக்க தாமதப்படுத்துவது சனாதன அடிமை மனநிலையா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆளுநர் உரை
அப்போது பேசிய அவர், இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வின் பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது என தெரிவித்திருந்தார்.
சனாதன அடிமை மனநிலையா?
ஆளுநரின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தூங்குகிறவர்களை எழுப்ப முடியும். தூங்குகிறவர்களைப்போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலளிக்க தாமதப்படுத்துவது சனாதன அடிமை மனநிலையா?’ என பதிவிட்டுள்ளார்.
தூங்குகிறவர்களை எழுப்ப முடியும்.
தூங்குகிறவர்களைப்போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலளிக்க தாமதப்படுத்துவது
சனாதன அடிமை மனநிலையா? pic.twitter.com/Sk430ySiek— S.Peter Alphonse (@PeterAlphonse7) February 21, 2023