ஈரோடு இடைத்தேர்தல்… 25ம் தேதி களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாரும் 25ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை.
ஈரோட்டில் திமுகவினர்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னு ஒரு சில நாடுகளே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிபீப்பிள் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு பரப்புரை நடத்தி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களை காட்டியுள்ளது.
தீவிர தேர்தல் பரப்புரை:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதன்பின் கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
முதலமைச்சர் பரப்புரை:
இதுபோன்று தொடர்ந்து திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோட்டில் தேர்தல் பரப்புரை வரும் 25ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.