மொழி ஒரு தடையல்ல..எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் சந்தோசபடுத்துவேன்…நடிகை ஹன்சிகா பேச்சு.!

Default Image

நடிகை ஹன்சிகா தமிழையும் தாண்டி தெலுங்கில் உருவாகும் படங்களும் நடித்து வருகிறார். பல திரைப்படங்கள் மற்றும் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆர்.கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘காந்தாரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

Hansika Motwani
Hansika Motwani [Image Source : Twitter]

இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஹன்சிகா “தனக்கு மொழி தடையில்லை என்றும் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்று நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன்” என கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஹன்சிகாசினிமாவில் படங்கள் மற்றும் விளம்பரங்கள், வெப் தொடர்களில் என எல்லாவற்றிலும் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஓரு விஷயம்.

Hansika Motwani
Hansika Motwani [Image Source : Twitter]

சினிமாவிற்கு வந்துவிட்டோம், எனவே ஒரு சில குறிப்பிட்ட மொழியில் உருவாகும் படங்களில் மட்டுமே தான் நடிக்க வேண்டுமென்று நான் முடிவெடுக்கவில்லை. எங்கு தென்னிந்திய சினிமாவிலிருந்து படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனவே இதன் காரணமாக மட்டும் தான் மற்ற மொழிப்படங்களில் நடிப்பது பற்றிய யோசனைகள் எனக்கு வருவதில்லை.

hansika motwani
hansika motwani [Image Source : Google ]

நான் சினிமா துறையில் இருக்கும் ஒரு பொழுதுபோக்குக் கலைஞர். மக்கள் எதனை ரசிக்கிறார்களோ அதனை நான் செய்வேன். எனவே என்னைப் பொறுத்தவரை, எனக்கு மொழி ஒரு தடையும் இல்லை. எந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், நான் ரசிகர்களை சந்தோஷபடுத்துவேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்