இனி ஓபிஎஸ் பாதை சரிப்படாது.! இபிஎஸ் அணியில் இணைந்த முருகானந்தம் பேட்டி.!
இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு வந்து விடலாம் என வந்துவிட்டோம். இனி ஓபிஎஸ் செல்லும் பாதை சரிப்படாது. – ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் அணியில் இணைந்த முருகானந்தம் பேட்டி.
இன்று அதிமுகவில், ஓபிஎஸ் அணியில் இருந்த முருகானந்தம் என்பவர் எடப்பாடி பழனிசாமி அணியிடம் தன்னை இணைத்துக்கொண்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் செய்தது எனக்கு வருத்தம் அளிப்பதாவும் குறிப்பிட்டார்.
அதிருப்தி : அவர் கூறுகையில், ஓபிஎஸ் அவர்களால் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக நான் நியமிக்கப்பட்டேன். எனது முயற்சியில் 106 உறுப்பினர்களை சேர்த்தேன். ஆனால் எங்களுக்கே தெரியாமல் தான் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை நிறுத்தினார். வேட்பாளர் அறிவிக்கப்படும் போது தான் எங்களுக்கு தெரியும்.
கட்சி உறுப்பினர் கிடையாது : அப்போதே தலைமை மீது வருத்தம் இருந்தது. இருந்தும் , தலைமையில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பார்க்கலாம் என காத்திருந்தோம். நான் கட்சியில் இணைந்து 20 வருடமாகிறது . வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபர் உறுப்பினர் கூட இல்லை என குற்றம் சாட்டினார்.
ஓபிஎஸ் பாதை : அதானல் தான் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு வந்து விடலாம் என வந்துவிட்டோம். இனி ஓபிஎஸ் செல்லும் பாதை சரிப்படாது என குறிப்பிட்டார் மேலும், அதிமுக தொண்டர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் இல்லாதது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எல்லோரும் விரைவில் இபிஎஸ் தலைமைக்கு வந்து விடுவார்கள் என குறிப்பிட்டார் முருகானந்தம்.