தொடர் சரிவில் பங்குச்சந்தை..! வர்த்தகர்கள் கவலை..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 727 புள்ளிகள் குறைந்து 59,945 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,627 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,391 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 533 புள்ளிகள் அல்லது 0.88% என குறைந்து 60,138 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. தற்பொழுது கடும் சரிவை சந்தித்த சென்செக்ஸ் 727 புள்ளிகள் குறைந்து 59,945 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 199.30 புள்ளிகள் அல்லது 1.12% குறைந்து 17,627 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குச்சந்தையின் சரிவால் சந்தையில் முதலீடு செய்த பல நிறுவனங்களின் பங்குகள் சரிந்து நஷ்டமடைந்துள்ளது. இதனால் வர்த்தகர்கள் கவலையில் உள்ளனர்.