அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வரவேண்டும் என்பதே இலக்கு.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.!
அனைத்து மக்களும் மருத்துவ சேவைகளை பெற அரசு மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு.
இன்று அரசு மருத்துவ கல்லூரில் அரசு உள் ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பயின்று வரும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கருவி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது . இந்த விழாவில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு : அப்போது அவர் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் நடவடிக்கையின் பெயரில் அரசு பள்ளியில் பயின்று மருத்துவ கல்லூரியில் 7.5 உள்ஒதுக்கீட்டு பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 555 மாணவர்களுக்கு 82 லட்சம் மதிப்பில் கையடக்க கருவிகள் வழங்கப்பட்டது .
எண்ணிக்கை அதிகம் : அதே போல, தற்போது இந்தாண்டும் அதே போல அரசு பள்ளியில் பயின்ற 582 மாணவர்களுக்கு 85 லட்சம் செலவில் கையடக்க கருவிகளை தமிழக அரசு வழங்குகிறது. அதே போல கொரோனாவுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை என்பது தற்போதைய எண்னிக்கையை விட குறைவு தான்.
மருத்துவ சேவை : இது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை காட்டவில்லை. தனியார் மருத்துவமனைகளை மீறி அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதை காட்டுகிறது. அனைத்து தமிழக மக்களும் மருத்துவ சேவைகளை பெற அரசு மருத்துவமனைகளை நோக்கி வரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என தெரிவித்தார்.
மேற்கண்ட இலக்கில் தற்போது 50 சதவீதம் நிறைவாடைந்துள்ளது என நினைக்கிறன் எனவும் அந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.