தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான் – அமைச்சர் நாசர்
தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான் என அமைச்சர் நாசர் பேச்சு.
வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரபப்பாக காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம்
இந்த நிலையில், ஈரோட்டில் அமைச்சர் நாசர் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல துன்பங்கள் இஸ்லாமியர்களுக்கு நிகழ்கின்றன; தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான். இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறது, ஒன்றிய அரசு என தெரிவித்துள்ளார்.